Enable Javscript for better performance
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் காலமானார்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8

    தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் ச. முத்துக்குமரன் (84) சென்னை பெசன்ட் நகரில் வியாழக்கிழமை (ஏப்.14) காலமானார்.
     அவருக்கு மனைவி மு.ரத்தினாவதி, ரயில்வே மருத்துவமனை தலைமை முடநீக்கியல் மருத்துவர் ரவிக்குமார், பொறியாளர் மேகநாதன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
     மயிலாடுதுறை அருகே திருமீச்சூரைச் சேர்ந்த ச.முத்துக்குமரன், மத்திய அரசின் துணை கல்வி ஆலோசகராகவும், மாநில அரசின் திட்டக்குழு, தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர், அகில இந்திய தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர், தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
     பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1988-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை பணியாற்றியபோது, புவி அறிவியல், சமூக அறிவியல் சிறப்புப் பள்ளிகள், தமிழ்த்துறை, தொலைதூரக்கல்வி மையம் ஆகியவற்றைப் புதிதாகத் தொடக்கி வைத்தார்.
     அத்துடன் சமச்சீர் கல்விக்குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 21 புத்தகங்களும், பல்வேறு சிறப்புக் கட்டுரையும் எழுதியுள்ளார். இவரின் "நெஞ்சில் நிறுத்துங்கள்' புத்தகத்துக்கு தமிழக அரசின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     அவரின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 044-24914270, 90031-60519,97102-29910.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai