Enable Javscript for better performance
ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமல்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமல்

    By  ராமேசுவரம்,  |   Published on : 15th April 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் நிறுத்தி வைத்துள்ளனர்.
     தமிழகப் பகுதிகளில் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப் பெருக்கத்துக்காகவும், தமிழக அரசு ஆண்டுதோறும் 45 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் தொடங்கி மே 29-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து வியாழக்கிழமை ராமேசுவரம் கடல் பகுதியில் 822, பாம்பன் கடல் பகுதியில் 95, மண்டபம் கடல் பகுதியில் 570 என மொத்தம் 1,487 விசைப் படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். மேலும், வலைகள், கயிறுகள், அடையாள அலுமினியம், பிளாஸ்டிக் குண்டுகள், ஐஸ் பெட்டி உள்பட மீன்பிடி சாதனங்களை சேகரித்து பாதுகாப்பாக வாகனங்களில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai