Enable Javscript for better performance
லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் - Dinamani

சுடச்சுட

    

    லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

    By  நாமக்கல்,  |   Published on : 15th April 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7

    லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல் என்றார் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம்.
     நாமக்கல் அருகே லத்துவாடியில் நம்பிக்கை இல்ல கட்டடத் திறப்பு விழா, தொழிற் பயிற்சி நிலைய அடிக்கல் நாட்டு விழா மற்றும் சித்திரை விழா எனும் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தலைமை வகித்துப் பேசியதாவது:
     கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நம்பிக்கை இல்ல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டன. லஞ்சம் வாங்கக் கூடாது என நினைத்தேன். அதனால், கடந்த 2009-ஆம் ஆண்டு எனது சொத்து விவரப் பட்டியலை வெளியிட்டேன்.
     அப்போது இந்தியாவிலேயே சொத்து விவரப் பட்டியலை முதலில் வெளியிட்ட ஆட்சியர் என பத்திரிகைகள் எழுதின. லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல். கடந்த 2012-ஆம் ஆண்டு கிரானைட் ஊழலால் அரசுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு முழு அறிக்கையும் நீóதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
     இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என முனைப்போடு செயல்படுகின்றனர். முதல்வராக வேண்டும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. நான் சாதாரண அதிகாரி. தமிழ்ச் சமூகம் மீது எனக்குப் பற்று உள்ளது. ஆனால் அதில் அரசியல் இல்லை. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகப் பணிகள் செய்ய வேண்டும். இன்றைய இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகாமல் நேர்மைக்கு அடிமையானால் தமிழ்ச் சமூகம் மேம்படும் என்றார்.
     தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பி.சமுத்திரக்கனி பேசியதாவது:
     சென்னையில் வெள்ளம் வந்த போது அரசியல் வாதிகள், அதிகாரிகள் செய்ய முடியாததை இளைஞர்கள் செய்தனர். துடிப்பான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை.
     இளைஞர்கள் அனைத்தையும் வழங்கத் தயாராக உள்ளனர். ஆனால் அவை சரியான இடத்துக்கு போகுமா என்ற சந்தேகம் உள்ளது. இது மிகப் பெரிய குழப்பான சூழல். இது நமது தேசத்துக்கு சாபக்கேடு.
     அடுத்த தலைமுறையாவது லஞ்சம், ஊழலற்ற நிலைக்கு மாற வேண்டும். சகாயம் எந்த வழியை சொல்கிறாரோ அதை பின்பற்றி நடப்பேன் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai