Enable Javscript for better performance
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள்

    By  விழுப்புரம்,  |   Published on : 15th April 2016 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வியாழக்கிழமை பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.
     விழுப்புரம் மாவட்ட திமுக செயலரான பொன்முடி, திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை விழுப்புரத்தில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், தொகுதி மாற்றத்தை அவர் உறுதி செய்துவிட்டார்.
     இந்த நிலையில், திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.ஜனகராஜ், மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மாவட்ட முன்னாள் செயலர் ஏ.ஜி.சம்பத், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விழுப்புரத்தில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென்று எதிர்பார்த்திருந்தனர்.
     ஆனால், அவர்களை விருப்ப மனு கொடுக்கவும் விடாமல், பொன்முடி சாதுர்யமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில், திடீரென கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
     இதை ஏற்காத திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி தொகுதிகளை எதிர்பார்த்திருந்த மேற்கண்ட முக்கிய நிர்வாகிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
     இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை தேர்தல் பணியைத் தொடங்கினர்.
     விழுப்புரம் நகர கட்சி அலுவலகத்திலிருந்து பொன்முடி தலைமையில் ஊர்வலமாக வந்த அந்தக் கட்சியினர், பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலைக்கும், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கர், அண்ணா சிலைக்கும், தொடர்ந்து அங்கிருந்து பெரியார் சிலைக்கும் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தனர். இதில், பங்கேற்ற மாவட்டச் செயலர் பொன்முடி, விக்கிரவாண்டி வேட்பாளர் கு.ராதாமணி, வானூர் வேட்பாளர் மைதிலி ராஜேந்திரன், கூட்டணி கட்சி விழுப்புரம் வேட்பாளர் அமீர் அப்பாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து அறிமுகம் செய்து கொண்டனர்.
     இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜனகராஜ், முனனாள் எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
     இதேபோல, பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai