Enable Javscript for better performance
13 இடங்களில் வெயில் சதம்; வேலூரில் 108 டிகிரி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் வியாழக்கிழமை 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
     இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
     வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரியும், திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் 106 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த சில நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும். பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
     வியாழக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): வேலூர் - 108, திருத்தணி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், தருமபுரி - 106, மதுரை, பாளையங்கோட்டை - 104, நாகப்பட்டினம், சென்னை - 102, தொண்டி, கோவை - 100.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai