Enable Javscript for better performance
இன்றுடன் முடிகிறது வேட்புமனு தாக்கல்: இதுவரை 4,082 பேர் மனு அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இன்றுடன் முடிகிறது வேட்புமனு தாக்கல்: இதுவரை 4,082 பேர் மனு அளிப்பு

    By  சென்னை,  |   Published on : 29th April 2016 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதுவரை 4 ஆயிரத்து 82 பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.
     சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி என அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
     வியாழக்கிழமை வரை 4 ஆயிரத்து 82 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்கள் 3 ஆயிரத்து 612 பேர், பெண்கள் 468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் ஆவர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும்.
     இறுதி வாக்காளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai