Enable Javscript for better performance
சுவாதி கொலை: ராம்குமாரை விடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    சுவாதி கொலை: ராம்குமாரை விடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

    By மதி  |   Published on : 11th August 2016 05:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramkumar_coat_1


    சென்னை
    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை விடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
    சுவாதி கொலை வழக்கில் கிடைத்த சிசிடிவி விடியோக்களில் குற்றவாளி தொடர்பாக பதிவான காட்சிகளையும் ராம்குமாரை விடியோ எடுத்து அந்த விடியோ காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க காவல்துறை முடிவு செய்தது.
    இதற்காக விடியோ பதிவு செய்ய அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையின் மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.
    ராம்குமாரை விடியோ பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரி ராம்குமார் தரப்பு வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    மேலும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் கொலைக் குற்றவாளி என்ற கோணத்திலேயே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
    வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராம்குமாரை விடியோ பதிவு செய்ய அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்தது.
    மேலும், ராம்குமாரை காவல்துறையினர் விடியோ பதிவு எடுத்து ஆவணங்களை தயார் செய்யலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai