Enable Javscript for better performance
பாசனத்துக்காக பவானி சாகர் அணை நாளை திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பாசனத்துக்காக பவானி சாகர் அணை நாளை திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

    By dn  |   Published on : 11th August 2016 12:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ecsImgcm

    பாசனத்துக்காக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு நாளை (12-ந்தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும், ஈரோடு வட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai