Enable Javscript for better performance
நிறைந்த ஆயுளும், சௌபாக்கியமும் அருளும் மகாலட்சுமி விரதம்- Dinamani

சுடச்சுட

    

    நிறைந்த ஆயுளும், சௌபாக்கியமும் அருளும் மகாலட்சுமி விரதம்

    By dn  |   Published on : 12th August 2016 04:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shrimahalakshmi

    INSERT MEDIA EMBDED :       URL LINK GIVEN

    விரதங்கள் என்று நாம் கடைபிடிப்பவை எல்லாமே நம்முடைய முற்பிறவி வினைகளைத் தீர்க்க உதவுபவையாகும். அவ்வகையில் தெய்வங்களின் அருளைப் பெற அந்தந்தக் கடவுளுக்குரிய விரதங்களை முறையான வழியில் கடைபிடித்தால், நிச்சயம் அதற்கான நற்பலன்களை அடையலாம்.

    இதில் பெண்கள் மட்டும் மேற்கொள்ளும் சில விரதங்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் வரலட்சுமி விரதம். "அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் செய்யப்படும் முதன்மையான விரதம் இது.

    HTML EMBEDED CODE PASTED IN SOURCE
    ---------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------

    இந்த விரதம், பொதுவாக ஆடிமாத வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று நோற்கப்படுகிறது. ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரதத்திற்குரிய காலமாகும். (இவ்வாண்டு ஆகஸ்ட் 11, ஆடி 28, வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரத நாளாகும்).

    இவ்விரதத்தை நிறைந்த ஆயுளும், சௌபாக்கியமும், நீடிய செல்வமும், மணவாளனுக்கு ஏற்றமும் வேண்டி பெண்கள் மேற்கொள்கின்றனர். மகாலட்சுமி தேவியே "சாருமதி' என்ற ஏழைப் பெண்ணின் கனவில் தோன்றி இந்த விரதத்தை மேற்கொள்ளுமாறுச் செய்து, அளவற்ற நற்பயன்களை அருளிச் செய்தாள் என்றால் இதன் சிறப்புக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

    EMBEDED CODE PASTED FROM YOUTUBE

     

    இந்த வரமளித்து வளம் காக்கும் லட்சுமி விரதத்தைச் செய்பவர்கள் மாவிலை, தேங்காயுடன் அரிசி போடப்பட்ட கலசத்தில் அம்மனின் முகம் என்று சொல்லப்படும் பிம்பத்தைக் கட்ட வேண்டும். காதோலை, கருகுமணி, பூக்கள், புத்தாடை, தாழம்பூ ஜடை ஆகியனவற்றால் அம்மனை அலங்கரிக்க வேண்டும். அம்மனது திருமுகம் பொருத்தப்பட்ட கலசத்தை பலகையில் இருக்கச் செய்து முறைப்படி பூஜைகள் நடத்த வேண்டும்.

    நோன்புக்கு முதல் நாள் மாலையிலேயே இவ்வலங்காரங்களைச் செய்து கலசத்துடன் அம்மனை வீட்டிற்குள், "லட்சுமித் தாயே! என் வீட்டிற்கு எழுந்தருளுவாயே'' என்ற பொருள்படும் கீர்த்தனங்களை பக்தியுடன் பாடி அழைத்து வருவது சம்பிரதாயம். பலர், "பாக்யத லஷ்மி பாரம்மா' என்ற புரந்தர தாஸரின் கிருதியை இச்சந்தர்ப்பத்தில் பாடுவது மரபு. அழைத்தால் ஓடி வருபவள் அல்லவா அந்த அலைமகள்?

    மறு நாளாகிய நோன்பு நாளன்று செய்யப்படும் பூஜையில் முக்கியமானது ஒன்பது முடிச்சு போடப்பட்டிருக்கும் நோன்புச் சரட்டை (மஞ்சள் தடவிய நூல்) கலசத்தில் உள்ள அம்மனுக்கு சாற்றி, அதற்கு விசேஷ அர்ச்சனைகள் செய்து, பின்னர் பூஜிக்கும் பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வதேயாகும். இந்தச் சரட்டை கணவர் கையால் அணிந்து கொள்வது இன்னும் சிறப்பு. வீட்டைச் சுத்தப்படுத்துதல் போன்ற புறத்தூய்மையுடன், அகத்தூய்மையும் கொண்டு இந்த விரதத்தை மேற்கொண்டால், திருமகள் நிரந்தரமாக நமது இல்லத்தில் குடியிருப்பாள் என்பது நிதர்சனமான உண்மை.

    IFRAME PROPERTIES : URL LINK GIVEN WITH WIDTH AND HEIGHT

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai