சுடச்சுட

  

  காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை

  By DIN  |   Published on : 29th December 2016 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காப்பக மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
  தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்த ராசையா மகன் ஸ்டீபன் ஜோசப் (50). இவர் மூக்குப்பீறியில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தாராம். அதில் 24 மாணவிகள், 18 மாணவர்கள் தங்கி படித்துவந்தனராம். இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த 8 மாணவிகளை, அலுவலகத்துக்கு சாப்பாடு கொண்டுவரச் சொல்லி, ஸ்டீபன் ஜோசப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். புகாரின்பேரில், நாசரேத் போலீஸார் 2011ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.
  இவ்வழக்கு திருநெல்வேலியில் 2ஆவது கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஏ. அப்துல்காதர் விசாரித்து, ஸ்டீபன் ஜோசப்புக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
  மேலும், பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு ஸ்டீபன் ஜோசப், தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai