சுடச்சுட

    
    46

    பெண் கொலை வழக்கில், திரைப்பட நடிகர், நடிகை ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே குப்பைத் தொட்டியில் அருகே ஜனவரி 5-இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது.
     விசாரணையில் அவர் போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மங்கல லட்சுமி நகரைச் சேர்ந்த சசிரேகா (30) என்பது தெரியவந்தது.
     இதுதொடர்பாக போலீஸார், சசிரேகாவுடன் வாழ்ந்த ரமேஷ் (34), அவருடன் இருந்த லக்குவியா (22) ஆகிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை பிடித்து விசாரித்தனர்.
     விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறியதாவது:-
     சசிரேகா தனது கணவரை பிரிந்து ரமேஷுடன் இரு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், குறும்படம் எடுக்கப்போவதாகக் கூறி சசிரேகாவிடம் லட்சக்கணக்கில் ரமேஷ் பணம் பெற்றுள்ளார். ஆனால், அவர் குறும்பட எடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
     இந்த நிலையில், ரமேஷுக்கு, கேளரத்தைச் சேர்ந்த லக்குவியா என்ற துணை நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் வைத்து ரமேஷுக்கும், சசிரேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
     இதில் தாக்குதலுக்கு ஆளான சசிரேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, ரமேஷும், லக்குவியாவும் தலையை துண்டித்து கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளனர். பின்னர் சடலத்தை ராமாபுரம் பள்ளியின் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே போட்டுள்ளனர்.
     ரமேஷ் மீது மோசடி புகார் அளித்த சசிரேகா நீண்ட நாள்களாக காவல் நிலையத்துக்கு வராமல் இருந்தது குறித்து விசாரித்தபோது, அவர் கொலையானது தெரியவந்தது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai