திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்: கே.எம். காதர் மொகிதீன்

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.
திமுக கூட்டணி  அமோகமாக வெற்றி பெறும்: கே.எம். காதர் மொகிதீன்

ஜனநாயகம், சமயசார்பற்ற சமூக நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகளை பேசும் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி  அமோகமாக வெற்றி பெற்று  திமுக ஆட்சி அமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்த காதர் மொகிதீன்,  வரவிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமு.க. கூட்டணியில் நாங்கள்  தொடர்ந்து இருப்பதாக கூறினார்கள்.  அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித் துக் கொண்டோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட பாரம்பரிய கொள்கையுடன் ஒத்து போகக் கூடியது.

திமுக. தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்  என்பதை தமிழகத்தில் உள்ள 60 சதவீத மக்கள் ஒத்துக் கொண்டி ருக்கிறார்கள்.  ஜனநாயகம் தழைக்கவும், சமூக நீதி பாதுகாக்கப்படவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும், இக் கொள்கைகளை கொண்டவர் கள்  திமுக.வுடன் கூட்டணி அமைக்க வரவேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இப்போது காங்கிரஸ் கூட்டணிக்கு வந்துள்ளது. மேலும் பல கட்சிகள் வர வேண்டும்.

திமுக, முஸ்லிம் லீக் மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக் கின்ற கட்சிகளுக்கும் சேர்த்து  12 முஸ்லிம்கள் இடம் பெறும் வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அப்போது தான்  சமுதாய வாக்குகள் முழுவது மாக கிடைக்கும் என்றும் தெரி வித்தோம்.

தேர்தல் கூட்டணியில்  ஊழல், மதம் இதில் எதுவும் கிடையாது. வெற்றி பெற வேண் டும் என்ற ஒரே இலக்கின் அடிப்படையில்தான் கூட்டணி வைக்கப்படுகிறது.  2ஜி ஊழல் குற்றச்சாட்டு கூறியபோதே நாங்கள் கூட்டணி வைத் தோம். சில பேர் மீது அரசியல் காழ்ப் புணர்ச்சியில் இல்லாததும், பொல்லாததும் சொல்வார்கள் என்றார் காதர் மொகிதீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com