சுடச்சுட

  

  அறநிலையத் துறை சார்பில் மகாமகம்-2016 காலண்டர் வெளியீடு

  By  கும்பகோணம்,  |   Published on : 20th January 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  5

  மகாமக விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட காலண்டர்களை கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
   கும்பகோணத்தில் மகாமக விழா பிப்ரவரி 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில், பிப்ரவரி 21-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
   விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களின் சுவாமி, அம்பாள் உருவங்கள் அச்சிட்ட 13 பக்கங்கள் கொண்ட மகாமகம்-2016 என்ற காலண்டரும், மகாமகம் தொடர்புடைய 5 வைணவ திருக்கோயில்களின் பெருமாள், தாயார் உருவங்கள் அச்சிட்ட 6 பக்கங்களுடனான மகாமகம்-2016 என்ற காலண்டரும் தயாரிக்கப்பட்டுள்ளது.
   இவற்றின் விலை முறையே, ரூ. 100, ரூ. 75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தலா 5 ஆயிரம் காலண்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன.
   இவை, மேற்கண்ட 17 கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் விற்பனை செய்யப்படவுள்ளன.
   மகாமக விழா பணிகளை பார்வையிட கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஆட்சியர் என். சுப்பையன், மகாமக குளக்கரையில் இந்த காலண்டர்களை வெளியிட்டார். அவற்றை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பெற்றுக்கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai