
விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கல்லூரிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
சின்ன சேலம் அருகேயுள்ள பங்காரம் என்ற இடத்தில் இயங்கி வருகிறது எஸ்விஎஸ் சித்த கல்லூரி. கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர் மாணவர்கள்.
இதையடுத்து மாணவிகளிடம் பெற்ற கட்டணத் தொகை மற்றும் சான்றிதழ்களை திருப்பி அளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை.
இந்நிலையில் மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா மூவரும் நேற்று ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து கல்லூரியை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி உத்தரவிட்டர். இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பத்ரிநாத் எஸ்விஎஸ் கல்லூரிக்கு இன்று மாலை'சீல்' வைத்தார்.