சுடச்சுட

  

  கோவையைச் சேர்ந்த சமூக சேவகருக்கு பத்மஸ்ரீ விருது

  By  கோவை  |   Published on : 26th January 2016 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  44

  கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் அருணாச்சலம் முருகானந்தம் (53) பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
   கோவை, வடவள்ளி அருகே உள்ள பாப்பநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் அருணாச்சலம். கைத்தறித் தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இத்தம்பதியின் மகன் அருணாச்சலம் முருகானந்தம். 1963-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்த இவர், ஏழ்மை காரணமாக பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
   இவரது தந்தை அருணாச்சலம், இவர் சிறு வயதாக இருந்தபோதே உயிரிழந்தார். இதனால், தாயாரின் பராமரிப்பில் அருணாச்சலம் முருகானந்தம் வளர்ந்தார். இவரது மனைவி சாந்தி. இத்தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
   பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய நாப்கின் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். மேலும், ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நாப்கின் தயாரிக்கும் பயிற்சியை அளித்து வருகிறார். வியாபார நோக்குடன் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த அருணாச்சலம் முருகானந்தத்தை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai