Enable Javscript for better performance
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம்- Dinamani

சுடச்சுட

    
    music

    சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி "ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்' என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது.

    சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக சுற்றுச்சூழல் பராமரித்தல், பெற்றோர்-ஆசிரியர்-பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், எல்லா ஜீவராசிகளையும் பேணுதல், நாட்டுப்பற்று, வனம்-வன விலங்குகளைப் பாதுகாத்தல் போன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    நினைவுப் பரிசு: இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai