Enable Javscript for better performance
விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி

    By சென்னை  |   Published on : 26th July 2016 03:13 AM  |   அ+அ அ-   |    |  

    இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்வது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?, ஏற்கத் தகுந்ததுதானா? என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-

    இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதையடுத்து, அன்றிரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர். இப்பொழுது இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்வது என்பது அனுமதிக்கத்தகுந்தது தானா? ஏற்கத் தகுந்ததுதானா? விவேகானந்தர் ரத ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தமிழக அரசு தடுக்குமா? என்றார் வீரமணி.

     

    kattana sevai