400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா' ஆரோக்கியத் திட்டம்:30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 25 வகையான பரிசோதனை

தமிழகத்தில் உள்ள 400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா' ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25 வகையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா' ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25 வகையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தத் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் "அம்மா' ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடிப்படை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

முதல்கட்டமாக, 400 மேம்படுத்தப்பட்ட, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முகாம்கள் நடைபெறும்.

25 பரிசோதனைகள்: ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள், ரத்த வகை பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் கொழுப்பு, ரத்த கிரியாட்டினின், சிறுநீரில் உப்பு, சிறுநீரில் சர்க்கரை, அல்ட்ரா சவுண்ட், ஈ.சி.ஜி, எக்ஸ்ரே, சளி பரிசோதனை, கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, பார்வை குறைபாடு, கண் புரை நோய் பரிசோதனை, தோல் நோய் பரிசோதனை உள்ளிட்ட 25 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பரிசோதனையின்போது உயர் சிகிச்சை தேவைப்படுவது கண்டறியப்பட்டால், அரசு மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளியாக அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு இதுவரை ரூ.2.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,15,069 பேர் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com