திமுகவில் மக்கள் தேமுதிக:ஜூலை 17-இல் இணைப்பு விழா

திமுகவில் மக்கள் தேமுதிக இணைந்தது. மேலும், சேலத்தில் ஜூலை 17-இல் இணைப்பு விழா நடைபெறுகிறது.
திமுகவில் மக்கள் தேமுதிக:ஜூலை 17-இல் இணைப்பு விழா

திமுகவில் மக்கள் தேமுதிக இணைந்தது. மேலும், சேலத்தில் ஜூலை 17-இல் இணைப்பு விழா நடைபெறுகிறது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை காலை 10.50 மணியளவில் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியது: மக்கள் தேமுதிக கலைக்கப்பட்டு, திமுகவில் இணைத்துவிட்டது.

தேமுதிக நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அதன் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். சுற்றுப்பயணம் செய்து, அதிருப்தியாளர்களை திமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். சேலத்தில் ஜூலை 17-இல் இணைப்பு விழா நடைபெறும். அதில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

விஜயகாந்த்தை அழைக்கவில்லை: சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திமுக கூட்டணிக்கு தேமுதிகவை யாரும் அழைக்கவில்லை. திமுகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கலாம்.

தேமுதிகவினர் பலர் திமுகவில் இணைந்துவிட்டனர். தமிழக அரசியலில் விஜயகாந்த்தை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.

தேர்தலில் திமுக தோல்வியடைய மக்கள் தேமுதிக நிர்வாகிகளை காரணம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியிருப்பது உண்மைதான். இதைத்தான் தேர்தலுக்கு முன்பு கூறினோம். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து திமுகவை ஆட்சிக்கு வராமல் செய்வதுதான் வைகோவின் நோக்கம் என்றார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com