ஒரே நாளில் 1.71 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுப்பு: என்எல்சி புதிய சாதனை

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒரே நாளில் 1.71 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு புதிய சாதனை செய்யப்பட்டுள்ளதாக

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒரே நாளில் 1.71 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு புதிய சாதனை செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.
 நெய்வேலி என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பேசியதாவது:
 என்எல்சியில் உள்ள மூன்று சுரங்கங்களிலும் சேர்த்து கடந்த கடந்த 19-ஆம் தேதி ஒரு லட்சத்து 71 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சாதனைகளை இந்த நிகழ்வு முறியடித்துள்ளது. இதற்காக சுரங்க அலுவலர்களைப் பாராட்டுகிறேன்.
 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் துறையிலும் என்எல்சி ஈடுபட உள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சுரங்கம், ஒடிஸா மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள இரு சுரங்கங்களிலும் சேர்த்து ஆண்டுக்கு 315 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 தற்போது ஆண்டுக்கு 306 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் என்எல்சி, விரைவில் 569 லட்சம் டன் வெட்டி எடுக்கும் வகையில் புதிய திட்டங்களைத் தொடங்க உள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com