Enable Javscript for better performance
தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை

    By dn  |   Published on : 04th May 2016 05:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 14ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராஜ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மே மாதம் 14, 15 மற்றும் 16ம் தேதி வரை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003. விதி 12(2)ன்படி வருகின்ற 16.05.2016 அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016 -ஐ முன்னிட்டு 14.05.2016 காலை 10.00 மணி முதல் 16.05.2016 அன்று நள்ளிரவு 12.00 மணிவரையிலும், மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 19.5.2016 அன்று முழுவதும், சென்னை மாவட்டத்திலுள்ள எப்எல்1 உரிமம் கொண்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனைச்சார்ந்த பார்கள், எப்எல்2 முதல் எப்எல்11 வரை அதனைச் சார்ந்த பார்கள் மற்றும் ஓட்டல்களின் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்கவேண்டும் எனவும். அன்றைய தினங்களில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான சட்டவிதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்  தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai