Enable Javscript for better performance
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி கைது- Dinamani

சுடச்சுட

    

    பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி கைது

    By DN  |   Published on : 04th May 2016 08:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    valarmathi1

    சிதம்பரம்: நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாவேயிஸ்டுகள் உட்பிரிவான பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மாணவி மா.வளர்மதியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    சேலம் மாவட்டம் வி.மானூர் கிராமத்தைச் சேர்ந்த மா.வளர்மதி (22). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பயின்றவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் போது கலகத்தை தூண்டிவிட்டதாகவும், அப்போது காவலாளிகளை மிரட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகததால் மா.வளர்மதிக்கு சிதம்பரம் முதலாவது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை கியூ  பிரிவு போலீஸார் மற்றும் சிதம்பரம் சரக போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் கியூ பிரிவு போலீஸார் அளித்த தகவலின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீஸார் மதுரை தல்லாக்குளத்தில் மா.வளர்மதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை சிதம்பரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து சிதம்பரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி ஆயிஷாபேகம், வளர்மதியை மே.16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் வளர்மதியை கடலூர் மத்தியசிறைச்சாலையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai