Enable Javscript for better performance
நெல்லை அருகே தனியார் பேருந்து-கண்டெய்னர் மோதல்: 16 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை அருகே தனியார் பேருந்து-கண்டெய்னர் மோதல்: 16 பேர் காயம்

    By DN  |   Published on : 15th May 2016 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி: திருநெல்வேலி் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து மீது கண்டெய்னர் மோதியதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து வடக்குசெழியநல்லூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கங்கைகொண்டானில் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, வலது பக்க பிரதான சாலையில் வந்த கண்டெய்னர் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்து அவ்வழியாக சென்ற கார் மோதியது. இதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தினால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai