Enable Javscript for better performance
கடலூர் அருகே முன்விரோதத்தில் சகோதரர்கள் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அருகே முன்விரோதத்தில் சகோதரர்கள் வெட்டிக் கொலை

    By DN  |   Published on : 21st May 2016 08:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர்: கடலூர் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    கடலூர் அடுத்துள்ள ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வினோத்குமார் (21), சதீஷ்குமார் (19).

    டிப்ளமோ படித்து விட்டு வினோத்குமார் வீட்டில் இருந்து வந்தார். சதீஷ்குமார் மயிலத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

    இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வினோத்குமார், சதீஷ்குமார் அவரது பாட்டி கோசலை ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனைத் தடுத்த கோசலையை அக்கும்பல் தாக்கி விட்டு சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இச்சம்பவங்களைப் பார்த்து தப்பியோடிய வினோத்குமாரை அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டி வீழ்த்தியது. இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றினர்.

    மேலும், வழக்குப்பதிவு செய்து லட்சுமணன், டேவிடர், சதீஷ், ராம்குமார் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பியை கும்பல் துரத்தி வெட்டிக்கொலை செய்தது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai