சுடச்சுட

    

    கானல் நீராகும் பாஜகவின் எம்.எல்.ஏ. கனவு: தொடர்ந்து 3 பேரவைகளில் இடமில்லை

    By சா.பெர்லின் மோசஸ்  |   Published on : 21st May 2016 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp-med

    சென்னை: மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற இயலவில்லை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை.

    கடந்த 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாததால் 13 நாள்களில் பதவியை ராஜிமாநா செய்தார் அக்கட்சியின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

    அதே ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தமிழக சட்டப் பேரவைக்குள் முதல் முதலாக நுழைந்தது.

    அந்தகட்சியின் சார்பில் பத்மனாபபுரத்தில் போட்டியிட்ட வேலாயுதம், பாஜகவின் உறுப்பினராக தமிழக பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். இந்த தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 2.02 சதவீதம் வாக்குகள் பெற்றது.

    இதையடுத்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில் கே.என்.லட்சுமணன் (மயிலாப்பூர்)கே.வி.முரளிதரன் (தளி), ஜெக.வீரபாண்டியன் (மயிலாடுதுறை), எச்.ராஜா (காரைக்குடி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலில் பாஜக 3.19 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

    தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

    அண்மையில் முடிவடைந்த தேர்தலில் பாஜக கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

    மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜகவின் கனவு கானல் நீராகவே தொடர்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai