Enable Javscript for better performance
தொடரும் சூறாவளி: பாம்பன், நாகையில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் சூறாவளி: பாம்பன், நாகையில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    By ஜங்ஷன் - intro  |   Published on : 21st May 2016 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் மற்றும் நாகை கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதால் வெள்ளிக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
     வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலை வடக்கு நோக்கி நகர்ந்து விசாகப்பட்டினம், காக்கிநாடா இடையிலான கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இருப்பினும் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று ஓயவில்லை. மண்டபம், பாம்பன், ராமேசுவரம் வடக்கு ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதையொட்டி, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகத்தின் தன்மைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும், கரையோரங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
     கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
     நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவானதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடந்த திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai