Enable Javscript for better performance
பேரவையில் திமுகவின் குரல் கம்பீரமாக ஒலிக்கும்- Dinamani

சுடச்சுட

    
    7

    சட்டப்பேரவையில் திமுகவின் குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
     சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:-
     தேர்தல் முடிவுகள் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலைப் பாதித்துள்ளது. எனினும் முறையாகத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
     கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவில் 23 பேரவை உறுப்பினர்கள் இருந்தோம். அப்போது எங்கள் கடமையைத் திறம்பட செய்தோம். இந்த முறை பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கிறோம்.
     இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையில் எங்கள் குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும்.
     சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக முறையாக சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்குத் துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai