Enable Javscript for better performance
மார்த்தாண்டம் அருகே அஸ்ஸாம் ரயில் தடம் புரண்டது: ரயில்கள் பல மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே அஸ்ஸாம் ரயில் தடம் புரண்டது: ரயில்கள் பல மணி நேரம் தாமதம்

    By  நாகர்கோவில்,  |   Published on : 21st May 2016 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் இருநது அஸ்ஸாம் மாநிலம் செல்லும் ரயில் மார்த்தாண்டம் அருகே தடம் புரண்டதால், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
     கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகருக்கு விவேகா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தது. இரணியலுக்கும், பள்ளியாடிக்கும் இடையே வட்டவிளை பகுதியில் வந்தபோது, மண் சரிவு ஏற்பட்டதில் என்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து தரையில் இறங்கின.
     இந்த விபத்து காரணமாக நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாகர்கோவில் நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
     வெள்ளிக்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய 2 பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், ரயில்கள் பல மணி நேரம் தாமதமானது.
     சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆரல்வாய்மொழியில் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்துர் செல்லும் பயணிகள் ரயிலும் இரண்டரை மணி நேரம் தாமதமாகச் சென்றது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai