Enable Javscript for better performance
மே 24-ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் குறித்து விவாதம்- Dinamani

சுடச்சுட

    

    மே 24-ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் குறித்து விவாதம்

    By DN  |   Published on : 21st May 2016 07:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Anna-Arivalayam

    சென்னை: சென்னையில் மே 24 ஆம் தேதி நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தமிழக தேர்தல் குறித்து விவாவதம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.

    இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், புதிதாதகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்

    கூட்டத்தில், நடைபெற்ற தமிழகத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai