சுடச்சுட

    
    lotes

    சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.

    சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது.

    இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார்.

    இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளன.

    இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

    மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது.

    அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர்.

    அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர்.

    அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai