Enable Javscript for better performance
புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேவூர் எஸ்.ராமச்சந்திரன்
     வயது : 56
     படிப்பு : 12ஆம் வகுப்பு
     ஊர் : சேவூர்
     குடும்பம் : மனைவி ஆர்.மணிமேகலை,
     மகன்கள் ஆர்.சந்தோஷ்குமார்,
     ஆர்.விஜயகுமார்.
     பதவிகள்: 2000-ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பேரவையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர். 1996-2001 வரை ஒன்றியக்குழு உறுப்பினர், 2006-11 சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர். முதல் முறையாக ஆரணி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினரானவர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஜி.பாஸ்கரன்
     வயது : 60
     படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.
     ஊர் : தமராக்கி, சிவகங்கை
     குடும்பம் : மனைவி முனியம்மாள்,
     3 மகன்கள், ஒரு மகள்.
     பதவிகள்: சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி செயலர், சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றினார். தற்போது இவர், தமிழக காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    நிலோபர் கபில்
     வயது : 54
     படிப்பு : பி.இ., எம்.எஸ்., எல்.எல்.பி.
     ஊர் : வாணியம்பாடி
     குடும்பம் : மகன் டாக்டர் இத்திரிஸ் கபில்,
     மகள்கள் நர்கிஸ் கபில்,
     நாதிரா கபில்.
     பதவிகள்: வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர், செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட மருத்துவரணி செயலாளர். 2001-2006, 2011-2016 என இருமுறை நகர்மன்றத் தலைவராக பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    பி.பாலகிருஷ்ணா ரெட்டி
     வயது : 47
     படிப்பு : பிளஸ் 2
     ஊர் : பாகலூர் அருகே ஜீமங்கலம்
     குடும்பம் : மனைவி ஜோதி,
     மகன் பா.சிராக்,
     மகள் லாசியா.
     பதவிகள்: அதிமுக ஒசூர் ஒன்றியச் செயலாளர். ஒசூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர், தற்போது கால்நடைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai