Enable Javscript for better performance
இன்று கடையடைப்பு இல்லை: த.வெள்ளையன்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
    விழுப்புரம், பாகர்ஷா வீதி வணிகர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில், ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஏழை, எளிய மக்களின் கையில் இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு, ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
    மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டத்தை பல்வேறு காரணங்களால் தள்ளிவைத்துள்ளோம். அதே நேரத்தில், திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் பங்கேற்பர். அந்நிய வர்த்தகத்தை எதிர்த்து, தமிழகத்தின் முக்கிய கடைவீதிகளில் வருகிற டிசம்பர் 15 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கறுப்புக் கொடி ஏற்றப்படும். அங்கு ஜனவரி 1 முதல் 14-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதேசிப் பொருள்களை மக்கள் வாங்க வலியுறுத்தி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai