Enable Javscript for better performance
கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை கிராம இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.
    கோட்டைப்பட்டியிலுள்ள கோட்டை முனியாண்டி கோயில் கார்த்திகை திருவிழாவையொட்டி, திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் அங்கு சென்ற போது, அனைவரும் காளைகளுடன் தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து அக்கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai