Enable Javscript for better performance
புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களை திறக்க வேண்டும்: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களை திறக்க வேண்டும்: ராமதாஸ்

    By DIN  |   Published on : 28th November 2016 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    சென்னையில் புதிதாக கட்டப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாத மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்காக உடனடியாகத் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-
    சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட மேம்பாலங்கள், கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் போக்குவரத்துக்கு திறந்து விடப்படவில்லை.
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர், குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவரது கைகளால் தான் இந்த மேம்பாலங்களைத் திறக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாரிகள் அடைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
    இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுóககு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட வேண்டும். எனவே, சென்னை வடபழனி மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம் உட்பட நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai