Enable Javscript for better performance
அமைச்சர்களுக்கு ஆளுநர் திடீர் அழைப்பு: காவிரி உள்பட முக்கிய பிரச்னைகளைக் கேட்டறிந்தார்- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சர்களுக்கு ஆளுநர் திடீர் அழைப்பு: காவிரி உள்பட முக்கிய பிரச்னைகளைக் கேட்டறிந்தார்

    By DIN  |   Published on : 08th October 2016 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    oops

    ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி. உடன், தலைமைச் செயலர் பி. ராம மோகன ராவ்.

    மூத்த அமைச்சர்களை திடீரென வெள்ளிக்கிழமை அழைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து 20 நிமிஷங்கள் ஆலோசித்தார்.
    அப்போது, தமிழக அரசின் தினசரி நிர்வாக நடவடிக்கைகள், காவிரி நதிநீர் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.
    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக அரசின் தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணி-நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, தலைமைச் செயலர் ராம மோகன ராவ் உடனிருந்தார்.
    இந்தச் சந்திப்பு குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள் இருவரிடமும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டறிந்தார்.
    தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசின் நீர்வளம்-நதிகள் மேம்பாடு-கங்கை புனரமைப்பு அமைச்சகம் சார்பில் உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    இந்தக் குழு காவிரி படுகைப் பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளது.
    இதுதொடர்பாகவும், குழுவிடம் தெரிவிக்கப்பட வேண்டிய முக்கிய விவரங்கள் ஆகியன குறித்தும் அமைச்சர்களிடம் ஆளுநரிடம் கேட்டறிந்தார். அப்போது, குழுவின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அதுதொடர்பான விஷயங்கள் குறித்தும் பொதுப்பணி-நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் விளக்கினார்.
    அரசின் நிர்வாக நடவடிக்கைகள்: தமிழக அரசின் பொதுவான நிர்வாகம் குறித்து அமைச்சர்கள், தலைமைச் செயலரிடம் ஆளுநர் கேட்டார். அப்போது, தினந்தோறும் மேற்கொள்ளப்படும் தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகள், இதர பொது விஷயங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ் விளக்கினார் என்று கூறப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai