Enable Javscript for better performance
உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்துக்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய அரசு வரவேற்றுள்ளது. கருத்துக்களை ஜ்ஸ்ரீண்-ம்ட்ழ்க்ஃஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, ஆர்.என்.405-சி, உயர் கல்வித் துறை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சாஸ்திரி பவன், புதுதில்லி என்ற முகவரிக்கு தபால் மூலமோ வரும் 28 -ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
    மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள்: இந்தத் திட்டத்தின் கீழ், 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு 2016-17 முதல் 2020-21 கல்வியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு உலகத் தரத்திலான கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
    ரூ. 500 கோடி நிதி: இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய அரசின் சார்பில் 5 ஆண்டுகளுக்கான நிதியாக தலா ரூ.500 கோடி அளிக்கப்படும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இந்த நிதி கிடைக்காது.
    முக்கிய வழிகாட்டுதல்கள்
    என்னென்ன?
    உலகத் தரத்திலான கல்வி நிறுவனத்துக்கான வரைவு வழிகாட்டுதலில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனம்
    பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை வழங்க வேண்டும்
    குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்திருக்க வேண்டும்
    குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வேண்டும்
    மாணவர் சேர்க்கை முழுவதும் மதிப்பெண் அடிப்படையில் நேர்மையாக இருக்க வேண்டும்
    அறிவிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் இருக்க வேண்டும்
    விஞ்ஞானரீதியிலான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்
    சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி உடன்பாடு செய்திருக்க வேண்டும்
    உலகத் தரத்திலான நூலகம் என மேலும் பல்வேறு விதிமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் வெளியிடப்பட்டுள்ளது.
    கல்விக் கட்டண சுதந்திரம்: இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கும், உள்நாட்டு மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை எந்த அளவுக்கும் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் சுதந்திரம் அளிக்கப்படும்.
    மேலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 30 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ள கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
    இதேபோல் மொத்த பேராசிரியர் பணியிடத்தில் 25 சதவீதம் வெளிநாட்டு பேராசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai