Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு புதிய குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை 3 முறை மதிக்காத காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, 4-ஆம் முறை ஆட்சி போகும் என்ற பயத்தில் தமிழகத்துக்கு குறைந்த அளவு தண்ணீர் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
    இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அமைச்சரவையின் ஒப்புதலுடன் புதிய அணை கட்டப்படும் என்றும் இதற்காக ரூ.5,700 கோடி ஒதுக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
    இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதுடன், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக அரசு புதிய குழப்பத்தை இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்த முயற்சிக்கிறது.
    எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று வாசன் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai