Enable Javscript for better performance
கோவை கலவரம்: பொது சொத்துகள் சேதத்துக்கு இழப்பீடு வசூலிக்கக் கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    கோவை கலவரம்: பொது சொத்துகள் சேதத்துக்கு இழப்பீடு வசூலிக்கக் கோரிய மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 08th October 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட அமைப்பிடம் இருந்து வசூலிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
    இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (36), கடந்த மாதம் 22 -ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் (செப்.23) நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தின்போது கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட கலவரங்களில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
    சேதமடைந்த பொது சொத்துகளை மதிப்பீடு செய்ய தனி குழு அமைக்க வேண்டும். மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை இந்து முன்னணியின் மாநில, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த விஷயத்தில் தற்போது நீதித் துறை தலையிடுவதற்கான நேரம் வரவில்லை. மனுதாரர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்ட விஷயத்தில் அரசுதான் விசாரணை நடத்தி முடிவெடுக்க முடியும். ஆகையால் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai