Enable Javscript for better performance
சிவகாசி அருகே பட்டாசு கிட்டங்கியில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    
    fire

    பட்டாசுக் கிட்டங்கியில் ஏற்பட்ட ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

    சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வெடிகள் சேதமாகின.
    சிவகாசி- சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டியில் ராஜமாணிக்கம் (46) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையின் ஒரு பகுதியில் பட்டாசு பண்டல்களை இருப்புவைக்கும் கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில் லாரியில் பட்டாசு பண்டல்கள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது ஒரு தொழிலாளி ஒரு பண்டலை தூக்கியபோது, கைதவறி கீழே விழுந்தது. இதனால் ஏற்பட்ட உராய்தல் காரணாக தீ விபத்து ஏற்பட்டது. தீ லேசாக எரியத்தொடங்கியதும், லாரியை அப்புறப்படுத்தி விட்டனர்.
    மேலும் ஆலையில் இருந்த தொழிலாளர்களும் வெளியே ஓடிவிட்டனர். ஆனால் கிட்டங்கியில் இருந்த பல தரப்பட்ட பட்டாசுகளும் வெடித்து மளமளவென எரிந்தன.
    தகவலறிந்து சிவகாசியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், விருதுநகர், சாத்தூர் ஆகிய ஊர்களிருந்து தலா ஒரு வாகனமும் வந்தன. வெடிகள் வெடித்து சிதறிக்கொண்டு இருந்ததால் தீயை அணைக்க அருகே செல்ல முடியவில்லை. இதில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சாம்பலாயின. பிறப்பகல் இரண்டு மணிவரை தீ எரிந்து கொண்டிருந்தது. கிட்டங்கி அறைகள் லேசான சேதம் அடைந்தன. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai