Enable Javscript for better performance
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மனைகளுக்கு அங்கீகாரம்: ராமதாஸ் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மனைகளுக்கு அங்கீகாரம்: ராமதாஸ் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள், அவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகளைப் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வேளாண் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, அதில் கட்டப்படும் கட்டடங்களால் சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் மழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
    ஆனால், அங்கீகாரம் பெறப்படாத வீட்டு மனைகளை வரையறுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வீடு கட்டுவதற்காக நத்தம் என்ற வகை நிலங்கள் ஒதுக்கப்பட்டன. புறம்போக்கு நிலங்களில் காலம் காலமாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு அரசாங்கமே பட்டா வழங்கும். இவற்றில் ஒரு சிலவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கும், சிலவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்காது.
    நிலங்கள் வரன்முறை படுத்தப்படுவதற்கு முன்பிலிருந்தே, பல தலைமுறைகளாக இந்த நிலங்களில் பலர் வீடு கட்டி குடியிருக்கின்றனர். இத்தகைய நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு இதுவரை எந்தத் தடையுமில்லை.
    ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்த நிலங்களையும், அவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களையும் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்கள் மறுத்து வருகின்றன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்குக் கூட அவற்றை விற்க முடியவில்லை.
    எனவே, விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து, சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நிலங்களுக்கு அங்கீகாரமும், பத்திரப்பதிவுககான அனுமதியும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai