Enable Javscript for better performance
திமுக பிரமுகர் வீட்டின் மீது தாக்குதல்: போலீஸார் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்- Dinamani

சுடச்சுட

  

  திமுக பிரமுகர் வீட்டின் மீது தாக்குதல்: போலீஸார் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்

  By DIN  |   Published on : 08th October 2016 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  iebrk

  மதுரையில் வியாழக்கிழமை நள்ளிரவு திமுக பிரமுகர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள்.

  மதுரையில் வியாழக்கிழமை நள்ளிரவு திமுக பிரமுகர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் வி.கே. குருசாமி. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவரான இவர், தற்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகள் விஜயலட்சுமி, மாநகராட்சியின் 60-ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார்.
  இந்த நிலையில், காமராஜர்புரத்தில் உள்ள குருசாமியின் வீட்டுக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சென்றது. அப்போது, குருசாமி வீட்டில் இல்லையாம். அவரது மனைவி தங்கவேலம்மாள் மட்டும் இருந்துள்ளார். கும்பலைக் கண்ட அவர், கதவைத் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். மேலும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோ, அருகில் இருந்த தொழில்நிறுவனம் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் நாகராஜை அரிவாளால் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
  இதுகுறித்து தங்கவேலம்மாள் தனது கணவர் குருசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் கீரைத்துறை ஆய்வாளர் சூரகுமாரனுக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் சூரகுமாரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கும்பலைப் பிடிக்க முயன்றனர். அப்போது கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியால் 4 முறை சுட்டார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. இதில் 2 பேர் மட்டும் போலீஸாரிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் கும்பலைச் சேர்ந்த ஒரு நபருக்கு காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்ததாகவும், அவரை மற்றவர்கள் காரில் தூக்கிச் சென்றதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனாó. ஆனால் காவல் துறையினர் அதை மறுத்துள்ளனர்.
  தகவலின்பேரில் மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸாரிடம் சிக்கிய ராஜபாண்டி உள்ளிட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் மண்டலத் தலைவரான ராஜபாண்டியனின் மகன் கண்ணன், உறவினர்கள் கார்த்தி, அருண், முத்துப்பாண்டி, மற்றொரு முத்துப்பாண்டி, உதயகுமார், இருளன், காளி உள்பட 11 பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
  தப்பியோடியவர்களை கைது செய்ய சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அருண்சக்தி குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 8 பேர் பிடித்துள்ளதாகவும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  முன்னாள் மண்டலத் தலைவர்களான குருசாமி, ராஜபாண்டியன் ஆகிய இரு தரப்பினரிடையே நடந்து வரும் மோதலில் ராஜபாண்டியின் மகன், குருசாமியின் மருமகன் உள்பட 5 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai