Enable Javscript for better performance
படகு பழுதானதால் கடலில் மூழ்கிய மீனவர்கள் இருவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    படகு பழுதானதால் கடலில் மூழ்கிய மீனவர்கள் இருவர் மாயம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில், மீனவர்கள் இருவர் மாயமாகினர். அந்த மீனவர்களை கடலோரக் காவல் படையினர் தேடிவருகின்றனர்.
    ஜெகதாப்பட்டினம் அருகே ஏம்பவயல் பகுதியிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் சுமார் 400 மீனவர்கள் கடலுக்குள் வியாழக்கிழமை பிற்பகல் மீன் பிடிக்க சென்றனர். சுமார் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்புதாளையைச் சேர்ந்த குப்பைப்பிச்சை (50) என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகின் அடிப்பகுதியில் இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட பழுதால் கடல்நீர் புகுந்து படகு கடலில் மூழ்கியது.
    இதனால், படகில் இருந்த குப்பைப்பிச்சை மகன் ஆறுமுகம் (32), தூ. வில்லாயுதம் (55), ரா. சக்காத்து (44), ரா.பாலு (45) ஆகியோர் கடலில் மூழ்கினர். இதில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள், வில்லாயுதம், ஆறுமுகம் ஆகியோரை அந்தப் பகுதிக்கு வந்த சக மீனவர்கள் மீட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் கரைக்குத்திரும்பினர். இவர்களுடன் தத்தளித்த மீனவர்கள் சக்காத்து, பாலு ஆகிய இருவரையும் காணவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில், கடலோரக் காவல் படையினர் காணாமல் போன இருவரையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai