Enable Javscript for better performance
பாஜகவில் இணைந்தார் புதுச்சேரி தேமுதிக பொறுப்பாளர்- Dinamani

சுடச்சுட

    

     

    புதுச்சேரி, அக். 7: தேமுதிக புதுச்சேரி மாநில பொறுப்பாளர் அசோக்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
    தமிழகத்தில் தேமுதிக தொடங்கப்பட்ட போது, புதுச்சேரி மாநிலத்திலும் அதன் பிரிவு தொடங்கப்பட்டது. அதன் மாநில பொறுப்பாளர்களாக செல்வராஜ், வழக்குரைஞர் அசோக்பாபு ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
    இந்த நிலையில் தேமுதிக புதுச்சேரியில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை. மேலும் தேர்தல்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, தேமுதிக பொறுப்பாளர்களில் ஒருவரான செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் அசோக்பாபு மாநில பொறுப்பாளராக தொடர்ந்து வந்தார்.
    இந்நிலையில் அசோக்பாபு, தொகுதிச் செயலர்கள் புகழேந்தி, பிரகாஷ், கணேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில், அதன் அமைப்பு இணைப் பொதுச் செயலர்கள் சந்தோஷ், சத்தீஷ், மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai