Enable Javscript for better performance
பாரிவேந்தரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாரிவேந்தரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது நீதிமன்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pari

    பண மோசடி வழக்கில் நாள்தோறும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி இரண்டு நாள்கள் மட்டும் கையெழுத்திடுமாறு பாரிவேந்தருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக,
    சுமார் ரூ. 75 கோடி பெற்று பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட வழக்கில், எஸ்.ஆர்.எம். கல்விக் குழும தலைவர் பாரிவேந்தர் ஆகஸ்ட் 26-இல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
    சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு செப்டம்பர் 8-இல் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ரம் வழங்கி உத்தரவிட்டது.
    இந்த நிலையில், இதய நோய்க்கு சிகிச்சை பெறவுள்ளதால், ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்துமாறு பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 26-இல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "கடந்த 28 நாள்களாக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய விசாரனை அதிகாரி முன் பாரிவேந்தர் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்' என தெரிவித்தார்.
    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாள்தோறும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையைத்
    தளர்த்தி, "வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai