Enable Javscript for better performance
மீனவர்கள் மீதான தாக்குதல்: திருநாவுக்கரசர் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
    இந்தச் சம்பவத்தினைக் கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். பாஜக ஆட்சியில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண தொடர் நடவடிக்கை எடுக்காததால், மீனவர்கள் தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai