Enable Javscript for better performance
முகநூலில் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தவர் மீது நடவடிக்கைக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    முகநூலில் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தவர் மீது நடவடிக்கைக் கோரி மனு

    By DIN  |   Published on : 08th October 2016 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முகநூலில் தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சஞ்சய் காந்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மிகவும் தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவானது காங்கிரஸ் தொண்டர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும், இந்தப் பதிவானது காங்கிரஸ் கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும், தொண்டர்களைக் கோபப்படுத்தும் வகையிலும் உள்ளது. அதேபோல, இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் மாநகரக் காவல் ஆணையர் குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளார்.
    மேலும், கோவை மாநகரின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான காவல் ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். ஆகவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai