Enable Javscript for better performance
முன்னாள் துணைவேந்தரின் காவல் அக்டோபர் 13 வரை நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் துணைவேந்தரின் காவல் அக்டோபர் 13 வரை நீட்டிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் நீதிமன்றக் காவல் வரும் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை கிளை 2008-2009-இல் ஜோதிபுரத்தில் செயல்பட்டு வந்தது. அப்போது துணைவேந்தராக ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல் துறையினர், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 1 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அமிர்தசஞ்சீவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் சரிவர ஆஜராகாத காரணத்தால் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இந்த நிலையில், இந்த வழக்கு காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாகிருஷ்ணனின் காவலை அக்டோபர் 13-ஆம் வரை நீட்டித்து,விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai