Enable Javscript for better performance
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,718 கன அடியாகக் குறைந்தது.
    கர்நாடகம் நொடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தியதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 4,615 கன அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,718 கன அடியாகக் குறைந்தது.
    அணையிலிருந்து நொடிக்கு 12,000 கன அடி வீதம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 73.04 அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 35.36 டி.எம்.சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai