Enable Javscript for better performance
மேட்டூர் அணையில் உயர்நிலை தொழில்நுட்பக் குழு நாளை ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையில் உயர்நிலை தொழில்நுட்பக் குழு நாளை ஆய்வு

    By DIN  |   Published on : 08th October 2016 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேட்டூர் அணையில் உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறது.
    மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து தமிழக - கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் மசூத் உசேன், ஆர்.கே.குப்தா, நான்கு மாநிலத் தலைமைப் பொறியாளர்கள் உள்பட 13 பேர் கொண்ட உயர்நிலை தொழில்நுட்ப சிறப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்தனர்.
    இதையடுத்து சனிக்கிழமை இரவு இந்தக் குழுவினர் மேட்டூர் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
    உயர்நிலை தொழில்நுட்பக் குழு வருகையையொட்டி, வெள்ளிக்கிழமை மேட்டூர் அணை மற்றும் நீர்ப் பிடிப்புப் பகுதிகள், அணைக்கு வரும் நீர்வரத்து, நீர் திறப்பு மற்றும் இருப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் சார் -ஆட்சியர் மேகநாத ரெட்டி, வட்டாட்சியர் கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன், மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
    பின்னர், மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழு வருகைக்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai