Enable Javscript for better performance
அதிமுக 45-ஆவது ஆண்டு: அக். 17-இல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைந்து 45-ஆவது ஆண்டு தொடங்கும் நிகழ்வு வரும் திங்கள்கிழமை (அக்.17) நடைபெறுகிறது.
    இதுகுறித்து, முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் அதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்.
    மேலும், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொடக்க நாள் மலரை வெளியிடுகிறார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai